Monday, July 14, 2014

இலங்கை விரும்பாவிட்டால், தமது முயற்சியை கைவிட தயார், தென்னாபிரிக்கா

தென்னாபிரிக்காவின் தலையீட்டை இலங்கை விரும்பா விட்டால், தமது முயற்சியை கைவிட தயாரென, தென்னாபிரிக்க துணை ஜனாதிபதி சிரில் ரமபோசா, தனது இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை சந்திப்பதற்கு முன்னரே, அவர் இதனை தெரிவித்துள்ளார். உங்கள் அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் நான் இலங்கைக்கு வருகை தரவுள்ளேன். நீங்கள் எமது அநுசரணையில் விருப்பம் காட்டாவிடின் நாம் அதிலிருந்து விலகிக்கொள்வோம். நாம் எமது நாட்டின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டுமென்றும், ரமபோசா தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com