Saturday, July 19, 2014

விசாரணை நடத்துபவர்கள் யார் என்று தெரியாமல் எவ்வாறு அந்த விசாரணை மீது நம்பிக்கை வைக்க முடியும்?

இலங்கை விடயம் தொடர்பில் இரகசிய விசாரணையை நடாத்தும் ஐ.நா விசாரணைக் குழுவில் இடம் பெற்றுள்ள வர்களின் விபரங்களை வெளியிடுவதற்கு, ஐ.நா மனித உரிமை பணியகத்தின் பேச்சாளர் ருபேர்ட் கொல்வில் மறுத்திருந்துள்ளார்

இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் குறைந்தபட்சம் விசாரணையை மேற்கொள்பவர் களின் அடையாளங்கள் கூட வெளிப்படுத்தப்படாத நிலையில், 'விசாரணையை மேற்கொள்பவர்கள் யார் என்று தெரியாமல் எவ்வாறு அந்த விசாரணை மீது நம்பிக்கை வைக்க முடியும்? இந்த அநாமதேயமான விசாரணைக்குழு, ஒரு வேளை, கங்காரு நீதிமன்றத்தை விடவும் மோசமானதாக இருக்கலாம். எனவே இலங்கை அரசாங்கம் இதனை ஏற்றுக்கொள்ளாது என தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐ.நா விசாரணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்டுள்ள மூன்று நிபுணர்களில் ஒருவரான ஜஹாங்கீர் வெளியிட்டு வரும் தொடர்ச்சியான கருத்துகள் வருத்தமளிக்கின்றன. அவரது நோக்கங்கள் தீவிரமான கவலை அளிக்கின்றன. அவர் இலங்கையை இலக்கு வைத்து தனிப்பட்ட முறையில் பரப்புரைகளில் ஈடுபடுவதாகத் தெரிகின்றது.

போருக்குப் பிந்திய நல்லிணக்க முயற்சிகளை, அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி சீர்குலைக்க முனைகிறது. உள்நாட்டு நெறிமுறையை வலுப்படுத்தவே, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மூன்று அனைத்துலக நிபுணர்களை நியமித்துள்ளார். உள்நாட்டு செயல்முறைகளுக்கு ஆதரவளிப்பதே இக்குழுவின் நோக்கம் எனவும், இலங்கை அரசு வெளிநாட்டு விசாரணை நெறிமுறையை அனுமதிக்காது' எனவும் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment