ரஷ்யா உல்லாசப் பயணியை வல்லுறவு செய்யமுயன்றவர் கைது! பாசி;க்குடாவில் சம்பவம்!
ரஷ்யா உல்லாசப் பயணியை பாலியல் துஷ்பிரயோகத் திற்கு உட்படுத்துவதற்கு முயன்றார் என்ற குற்றச்சாட்டில் வாழைச்சேனை பேத்தாளைப் பகுதியைச் சேர்ந்த 33 வயதான நபரொருவரை கைது செய்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
பாசிக்குடாவில் கடலோரப் பகுதில் தான் உல்லாசமாக இருந்த வேளையிலேயே அங்குவந்த மேற்படி நபர், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டதாக கல்குடாப் பொலிஸில் ரஷ்ய பிரஜை முறையிட்டுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.
1 comments :
பேய்தாளை யா நம்மட முன்னாள் முதலமைச்சரின் ஊர் ஆச்சே.
Post a Comment