திக்குவல்லைக் கடலில் மூழ்கி சீன தேசத்தவர் மரணம்!
அலையால் அடித்துச் செல்லப்பட்ட பெண் உயிர் தப்பினாள்!
மாத்தறை திக்குவல்லை கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது, பாரிய அலை ஒன்றுக்குள் சிக்கி நீரில் மூழ்கி 54 வயதுடைய சீன நாட்டவர் ஒருவர் மரணமடைந்துள்ளார். அந்த அலைக்குள் சிக்கிய சீனப் பெண் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்னும் ஐந்து சீனர்களுடன் உல்லாசமாக நீந்திக் கொண்டிருந்தபோது இறந்தவரின் பெயர் சென் சுன்.
16 பேருடன் கூடிய சீன உல்லாசப் பயணிகள் நேற்று முன்தினம் (23) பிற்பகல் திக்குவல்லைக்கு பயணம் மேற்கொண்டு, அங்கு கடற்பரப்பிற்கு அருகாமையில் உள்ள விடுதியொன்றில் தங்கியுள்ளனர்.
திக்குவல்லைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment