குயின்ஸ்பரி தோட்டத்தில் வாகன விபத்து! இருவர் படுகாயம்!!
திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவின் குயின்ஸ்பரி தோட்டப் பகுதியில் நேற்று (25) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த இருவர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தப் பகுதியில் பால் சேகரிப்பில் ஈடுப்பட்ட வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சேகரித்த பாலை குளிரூட்டும் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு திரும்பும் வழியில் வீதியை விட்டு விலகிய வாகனம் சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது வாகனத்தில் மூவர் பயணித்துள்ளனர். இவர்களில் இருவர் நாவலப்பிட்டி வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை திம்புள்ள – பத்தனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)
0 comments :
Post a Comment