எதிர்காலத்தில் நாட்டை ஆள்பவர் நாமல்(?) என்பதால் மர்வின் அளிக்கிறார் பரிசு!
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எதிர்காலத்தில் நாட்டை ஆள இருப்பதால், அதற்கு உதவியாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரைக் கூட்டிக் கொண்டு வந்துள்ளார் என மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மர்வின் சில்வா குறிப்பிடுகிறார்.
நேற்று முன்தினம் (09) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற “ஜோத்தி சிரியாமே சாரா” நிகழ்வில் கலந்துகொண்டு அங்கு வருகை தந்திருந்த புத்திக்க பதிரண, ரவி கருணாநாயக்க, பாலித்த ரங்க பண்டார, கயன்த கருணாத்திலக்க, அசோக்க அபேசிங்க ஆகிய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களைக் காட்டியே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நிகழ்வை ஆரம்பிக்க முன்னர் குத்து விளக்கேற்றுவதற்காக மேடைக்கு நாமல் ராஜபக்ஷவை அழைத்த மர்வின் சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
“எதிர்காலத்தில் நாட்டைப் பொறுப்பேற்கவுள்ளவர் நீங்கள். எதிர்காலத்தில் உங்களுக்கு உதவுவதற்காக நான் ஐவரைக் கொண்டுவந்துள்ளேன். அதற்குத் தேவையான மந்திரம் ஏற்றவுள்ள இந்த குத்துவிளக்கில்தான் உள்ளது”
அதற்குப் பின் அவ்விடத்திற்கு குத்துவிளக்கேற்றுவதற்காக வருகை தந்த புத்திக்க பதிரண இதற்கு பதிலளிக்கும் வண்ணம் “நான் அதற்கெல்லாம் ஏமாற மாட்டேன். நான் மந்திரங்கைள முறியடிக்கும் எண்ணெய் பூசி வந்துள்ளேன்” என்றார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment