Saturday, July 12, 2014

இலங்கை தொடர்பிலான ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றில்லை!

இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரி மைகள் பேரவையின் விசாரணைக்குழு விடயத்தில் இந்தி யாவின் நிலைப்பாட்டில் மாற்றில்லை எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரிடையே இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக பீ.பீ.சீ. உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

இருநாட்டு வெளிவிவகார அமைச்சர்களுக்கும் இடையில் புதுடில்லியில் நேற்று நடைபெற்ற சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன்போது இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்குழு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை குறித்து இந்த சந்திப்பின்போது ஆராயப்பட்டதா என ஊடகவியலாளர்கள் வினவியுள்ளனர். ஐ.நா விசாரணைக் குழுவை அமைக்கும் விவகாரத்தில் இந்தியா ஏற்கனவே மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் எதிராக வாக்களித்திருந்ததாக கூறிய அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர், இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளதாக பீ.பீ.சீ. செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதவிர இலங்கை – இந்திய மீனவர் விவகாரம், இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின்போது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு அளித்தல், இருநாட்டு வர்த்தக உறவுகள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்தும் இருநாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதுதவிர ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோரிடையே ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போது ஆந்திராவில் இலங்கையினால் மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீ டுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இலங்கையின் மூதலீடுகள் மூலம் 38, 500 இந்தியர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர் எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளரை மேற்கோள்காட்டி பீ.பீ.சீ. தகவல் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment