Thursday, July 3, 2014

ருகுணு பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து வன்மையாகக் கண்டிக்கிறோம்! - விரிவுரையாளர்கள் சங்கம்

2014.06.30 ஆம் திகதி பிற்பகல் ருகுணு பல்கலைக்கழக வெல்லமடம சூழலிலிருந்து தங்குமிடம் நோக்கிச் சென்ற மாணவர்களில் ஒருபகுதியினர் தாக்கப்பட்டமை குறித்து ருகுணு பல்கலைக்கழக மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீட, முகாமத்துவ நிதியியல் பீட விரிவுரையாளர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதாக ஊடக அறிக்கையொன்றை ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பிவைத்துள்ளது.

அவ்வூடக அறிக்கையில் -

எதிர்காலத்தில் நாட்டை பொறுப்பேற்கவுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறு பஸ் வண்டி நிறுத்தப்பட்டு மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்படுவதானது மிகவும் இழிந்த செயலாகும். ருகுணு பல்கலைக் கழகத்தினுள் அமைதியான சூழலினுள் இவ்வாறு தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது பல்கலைக் கழதகத்திற்கு மட்டுமன்றி முழு சமூகத்திற்கும் பெரும் அச்சுறுத்தாலாகும்.

அதனால், இத்தாக்குதலில் தொடர்புடையவர்களை இனங்கண்டு, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு இதற்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்களைக் கேட்டுக் கொள்கிறோம். மேலும், இதற்கு உடந்தையாகவுள்ள பின்னணி சக்திகளை இனங்கண்டு, அவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இதற்காக பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் நலன்விரும்பிகள், அனைவரும் பூரண பங்களிப்பு நல்க வேண்டும்.” எனவும் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

(கேஎப்)

No comments:

Post a Comment