கொழும்பில் உள்ள பாக்கிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அமீர் சுபைரே முக்கிய குற்றவாளி!
இலங்கைக்கு முக்கிய தகவல்களை தெரிவிக்க இந்திய மத்திய அரசு திட்டமிட்டம்!
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தகர்க்க சதி திட்டம் தீட்டியதாக இலங்கையைச் சேர்ந்த ஷாகீர் உசேனை, தமிழக பொலிஸார் சில மாதங்களுக்கு முன் கைது செய்தனர். அமெரிக்க தூதரகம் மட்டுமல்லாமல், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தையும் தகர்க்க, ஷாகிர் திட்டமிட்டிருந்ததாகவும், இதற்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உதவி செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து இந்த வழக்கின் விசாரணைடைய தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.,விடம், தமிழக பொலிஸார், கடந்த மாதம் ஒப்படைத்தனர். இந்நிலையில், இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ள முக்கிய தகவல்களை, இலங்கையிடம் தெரிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ´தூதரக தகர்ப்பு சதித் திட்டத்துக்கு மூளையாக செயல்பட்ட நபர் குறித்த தகவல் தெரியவந்துள்ளது. அமீர் சுபைர் சித்திக் என்ற அந்த நபர், கொழும்பில் உள்ள பாக்கிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றுவதாக தெரியவந்துள்ளது. இது குறித்த தகவல்கள், இலங்கைக்கு முறைப்படி தெரிவிக்கப்படவுள்ளன என்றன.
இதனையடுத்து வெளிநாட்டு தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தும் சதி திட்டம் குறித்த வழக்கில் இலங்கைக்கு முக்கிய தகவல்களை தெரிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
0 comments :
Post a Comment