Monday, July 21, 2014

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்குப் பதிலாக அதிகாரம்மிக்க பிரதமர் முறை!

நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதி முறைக்குப் பதிலாக அதிகாரம் கொண்ட பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கான சட்டமூலம் தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை இடம்பெறுவதாகத் தெரியவருகின்றது.

எதிர்வரும் ஊவா மாகாண சபைத் தேர்தலின் பின்னர் இது தொடர்பில் ஆவன செய்வதற்கான தீர்மானம் உள்ளதாகவும் தெரியவருகின்றது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதிலும் பார்க்க அதிகாரம்மிக்க பிரதமர் ஒருவரைத் தெரிவுசெய்வதே சிறந்ததாகும் என ஆளும் தரப்பில் பெரும்பாலானோரின் கருத்தாகவுள்ளது.

இதுதொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளதாகவும் மேலும் தெரியவருகின்றது.

(கேஎப்)

2 comments:

  1. No.No leader or any person holding high office should not be given ultimate authority.This is Y this countryis in this state

    ReplyDelete
  2. No.No leader or any person holding high office should not be given ultimate authority.This is Y this countryis in this state

    ReplyDelete