ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி மாதத்திலா இல்லை மார்ச் மாதத்திலா?
ஜனாதிபதித் தேர்தல் நடாத்துவது குறித்து அரசாங்கத்தில் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் நடாத்தப்பட வேண்டும் என அமைச்சர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளதுடன், மற்றும் சில அமைச்சர்கள் அடுத்த வருடம் மார்ச்சில் ஜனாதிபதித் தேர்தல் நடாத்துவதே உசிதமானது எனும் பிரேரணையை முன்வைத்துள்ளனர் என அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த வருடம் ஜனவரி மாதம் கடைசிப் பகுதியில் தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்த போதும், பாப்பரசரின் ஜனவரி மாதம் வருகை தரவுள்ளதால் ஜனாதிபதித் தேர்தலை ஜனவரியில் நடாத்துவது சிரமம் எனவும், அதனை மார்ச்சில் நடாத்துவதே சிறந்தது எனவும் அமைச்சர்களில் சிலர் கருத்து முன்வைத்துள்ளனர்.
அளுத்கமையில் அண்மையில் நடைபெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கான கூட்டமொன்றின்போது, ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்படுவதற்கு உசிதமான காலப்பகுதி யாது என வினவி, பத்திரமொன்று அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில், பெரும்பாலானோர் வெகுவிரைவில் ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதே சிறந்தது எனக் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(கேஎப்)
0 comments :
Post a Comment