வட மாகாண சபை மீது நம்பிக்கையிழந்துவிட்டோம்!
வட மாகாண சபை மீது நம்பிக்கையிழந்துவிட்டதாக, கிளி நொச்சி பொது சந்தை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
வட மாகாண சபை மீது இருந்த நம்பிக்கையை முற்று முழுதாக இழந்துவிட்டோம். கடந்த 29ம் திகதி வடக்கு முதலமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும், வட மாகாண சபையின் சில அமைச்சர்களும், கிளிநொச்சி பொது சந்தைக்கு வருகை தந்தபோது, நிரந்தர கட்டிடத் தொகுதியை விரைவாக அமைத்து, வாழ்வாதாரத்தை மேம்படுத்துமாறு தாம் முன்வைத்த கோரிக்கைக்கு, முதலமைச்சர் அளித்த பதிலில், எமக்கு எந்தவித நம்பிக்கையும் இல்லையென்றும், கிளிநொச்சி பொது சந்தை வர்த்தகர்கள், நேற்று பிற்பகல் சந்தை வளாகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்து ள்ளனர்.
கிளிநொச்சி, கரைச்சி பொது சந்தை, கரைச்சி பிரதேச சபை நிர்வாகத்தின் கீழ்வருகின்றது. பிரதேச சபையும், அவர்களுக்கு பொறுப்பாக உள்ள வடக மாகாண சபைம், சந்தை வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். எனினும் சந்தை வர்த்தகர்களாகிய எமக்கு 20 தடவைகளுக்கு மேல் கரைச்சி பிரதேச சபையின் கவனத்திற்கு பிரச்சினை சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென, அவர்கள் குற்றம் சாட்டு கின்றனர்.
சந்தையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லையெனவும், தற்காலிக தகர கொட்டில்களில் தொடர்ச்சியாக நெருக்கடிகளுக்கு மத்தியில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், மலசலகூட வசதியோ, ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளோ இல்லையென, அவர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் இந்த சந்திப்பின்போது, 172 சந்தை வர்த்தகர்கள் கையொப்பமிட்டு, ஊடகங்களுக்கு அறிக்கையொன்றையும், அவர்கள் விடுத்துள்ளனர்.
0 comments :
Post a Comment