ஓட மறுத்த காருக்குள் இருந்த மலைப்பாம்பு : அதிர்ச்சியில் உறைந்த பெண்!! (படங்கள்)
அமெரிக்காவின் நியூ மெக்சிக்கோ நகரில் மலைபாம்பு ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது காரை ஸ்ட்ராட் செய்யும் போது, அது இயங்கவில்லை. நீண்ட நேரம் போராடியும் பலன் கிடைக் கவில்லை
கடைசியாக அவ்வழியே சென்ற ஒருவரை உதவிக்கு அழைத்தார். அவரும் வெகு நேரம் முயற்சி செய்து பலனின்றி போகவே, உதவிக்கு வந்த நபர் காரின் பனெட்டை திறந்து பார்த்தார்.
அப்போது எஞ்சின் மீது ஒரு மலைப்பாம்பு சுருண்டு படுத்திருந்ததை அதிர்ந்துப் போனார். உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மலைப்பாம்பை பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
பட்டரியில் இருந்து எஞ்சினை ஸ்ட்ராட் செய்யும் செல்ஃப் மோட்டார் பகுதிக்கு செல்லும் இணைப்பு வயரை, பிடிபட்ட பாம்பு கடித்து விட்டிருந்ததால் கார் இயங்கவில்லை. இதன் பயனாக பாம்பை கண்டுபிடிக்க முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment