தாதியொருவரின் வீட்டின் கூரை மீது நின்ற சிங்களவர் கைது !!
மட்டக்களப்பு வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள ஆண் தாதியர் ஒருவரின் வீட்டின் கூரையின் மீது நின்ற சிங்களவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முற்பகல் 10 மணியளவில், குறித்த வீட்டின் கூரையின் மீது ஒருவர் நிற்பதை அவதானித்த அயல் வீட்டார், அப்பகுதி இளைஞர்களுக்கு தகவல் கொடுத்ததையடுத்து, இளைஞர்கள் சுற்றி வளைத்து அந்த நபரை மடக்கி பிடித்து மட்டக்களப்பு பொலிஸாரிடம் ஒப்படை த்துள்ளனர். குறித்த சிங்களவர் கொழும்பு பாதுக்கையைச் சேர்ந்த விக்ரமஆராச்சி(35 வயது) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் மட்டக்களப்பு மங்களராம விகாரையில் தங்கியிருந்தவர் என பொலிஸார் தெரிவிததுள்ளனர். குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment