Monday, July 28, 2014

இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் அநுசரணையிலேயே பயங்கரவாதச் செயல்கள் நடைபெறுகின்றன...!

இந்தியாவினால் கைதுசெய்யப்பட்டுள்ள பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ள நபர், இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்திலுள்ள ஒருவரினால் இயக்கப்படுபவர் என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாக்கீர் ஹுஸைன் என்ற பெயருடைய குறித்த இலங்கையர் இந்திய உளவுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எதுஎவ்வாறாயினும், குறித்த நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டவிடத்து இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் மூலம் வழிநடாத்தப்படுவதாகத் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பில் இந்திய உயர் அதிகாரிகள் இலங்கைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த அதிகாரி, பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் உயர் அதிகாரிகளில் ஒருவர் என்பதும், அவர் பயங்கரவாதச் செயல்களுடன் ஈடுபட்டவர் என்பதும் தெளிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்களும் தகவல் வெளியிட்டுள்ளன.

குறித்த உயர் அதிகாரியின் ஆலோசனையின் பேரில், பாக்கிர் ஹுஸைன் இந்தியாவின் சென்னையில் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்க குடியரசின் கவுன்சிலர் காரியாலம், இந்தியாவின் பெங்களுரில் அமைந்துள்ள இஸ்ரேலிய கவுன்ஸிலர் காரியாலயம் ஆகியவற்றின் தகவல்களைச் சேர்த்துள்ளதுடன், குறித்த கவுன்சிலர் காரியாலங்களின் படங்களையும் எடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த பாகிஸ்தான் தூதுவராலய காரியாலய ஊழியர் தொடர்பில் அரச தந்திர மட்டத்திலும் தகவல்கள் பரிமாற்றப்பட்டுள்ளன எனவும், இந்தியா - இலங்கையினிடையே 2010 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட அந்நியோன்ய சட்டரீதியான ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கேற்ப செயற்படுவதாகவும் அவ்வூடகங்கள் மேலும் சுட்டிக் காட்டியுள்ளன.

(அததெரண - கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com