மலேசிய விமான விபத்தில் பலியான இலங்கை வம்சாவளி தமிழ்ப் பெண் நடிகை! (படங்கள்)
33,000 அடி உயரத்தில் பயணித்துக்கொண்டிருந்த மலேசிய விமானம் பயங்கரவாதிகளின் ஏவுகணை தாக்குதலுக்கு இலக்காகி கரியாகிய சம்பவத்தில் சுபாஷினி ஜெயரத்னம் என்ற நடிகையும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மரணமடைவதற்கு 2 நாட்களுக்கு முன்னரே இவர் தனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார் என்பது குறிப்பிட த்தக்கது. இவருடன் சேர்ந்து பயணித்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த இவரின் கணவர் மற்றும் மகளும் இந்த சம்பத்தின் போது பலியாகியுள்ளனர்.
சுபாஷினி ஜெயரத்னம் ஜெயா என்றும் சுபா என்றும் தனது குடும்பத்தாராலும், நண்பர்களாலும், உறவினர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்டவர். மலேசியாவில் பிறந்து வளர்ந்தவரான ஜெயா இலங்கை வம்சாவளி தமிழ்ப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது இவர் நாடகம், நடனம், சினிமா, தொலைகாட்சி என்று பல்துறைகளில் சிறந்து விளங்கியவராவர்.
0 comments :
Post a Comment