காதல் முறிவினால் பிறந்த தினத்திலேயே உயிரைத் துறந்த யாழ். பல்கலைக்கழக மாணவன்!!(படங்களுடன் இரண்டாம் இணைப்பு)
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் ஆண்டு மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு ள்ளார்.நெல்லியடியை சேர்ந்த நாகராசா சுதாகரன் (21) என்னும் மாணவனே தனது வீட்டில் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த மாணவனின் தற்கொலைக்கு காதல் முறிவே காரணம் எனவும் கூறப்படுகின்றது. இதேவேளை தற்கொலை செய்து கொண்ட சுதாகரனுக்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிறந்தநாளில் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக அம்மாணவர், தனது முகப்புத்தகத்தில் (பேஸ்புக்) குறிப்பொன்றை பதிவேற்றம் செய்துள்ளார். இதன் பின்னரே, அம்மாணவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவரது சடலம் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில், நெல்லியடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். முகப்புத்தகத்தில் தற்கொலை செய்வதாகப் பதிவிட்டபின் தூக்கில் தொங்கித் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அடிக்கடி இடம்பெறுகின்றன.
அண்மைக்காலங்களில் மூவர் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இவர்களில்இருவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தனது பிறந்த நாளிலையே தனது இறப்பு நாளை குறித்துள்ளான் யாழ்.பல்கலைகழக மாணவன் ஒருவன் என முகநூலில் இப்படி ஒரு குறிப்பு வந்துள்ளது. இந்த மாணவனும் தனது மரணம் பற்றி 'மறு பிறவி இருந்தால் மீண்டும் வருகிறேன் உன் மடியில் சாய்ந்து உயிர் பிரியும் என்றால்' என முகனூலில் பதிவிட்டே சென்றுள்ளான்..'
0 comments :
Post a Comment