Thursday, July 17, 2014

வடமாகாணசபையே எம்மவர்களுக்கு நல்லது செய் இல்லாவிட்டால் பேசாமல் இரு! யாழில் துண்டுப்பிரசுரம்!

எங்கள் இனத்தினைக் கொன்று குவித்த மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகாவினை ஜனாதிபதியாக வருவதற்கு ஆதரி த்த த.தே கூட்டமைப்பு ஓய்வுநிலை இராணுவ அதிகாரியை மீளவும் ஆளுநராக்கியதை எதிர்க்க என்ன அருகதை இருக்கின்றது என யாழில் வடமாகாண சபைக்கு எதிராக அநாமதய துண்டுபிரசுரங்கள் இன்று பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

இத் துண்டு பிரசுரத்தில் மாகாண அரசே! எம்மவர்களுக்கு நல்லது செய்யமுடியாவிட்டால் மற்றவர்களை குறை காண்பது ஏன் ? குறை காண்பதை நிறுத்து. முடியாவிட்டால் இராஜினாமா செய்! என காணப்பட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com