எங்கள் கட்சியில் ஆயுதம் இல்லை… இளைஞர்கள் ஆயுத்த்தைக் கையில் ஏந்த இடமளிக்க மாட்டோம்..
வேறொரு கட்சியாக இளைஞர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்து அவர்களை ஒன்று சேர்க்கவோ, அரசியல் இலாபம் கருதி இளைஞர்களை ஒன்றுசேர்க்கவோ எங்களுக்குத் தேவையில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிடுகிறார்.
கல்கமுவ பிரதேசத்தில் “நீலப் படையணி”க்காக அங்கத்தவர்களை சேர்த்துக் கொள்ளும் வைபவத்தில் உரையாற்றும்போது இவ்வாறு .தெரிவித்தார்.
பா.உ. அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் -
“இளைஞர்களின் கரங்களில் ஆயுதங்களை ஈந்து நாங்களும் ஏனைய கட்சிகள் போல இளைஞர் குழுவொன்றைத் தயாரிப்பதில்லை. அரசியல் இலாபம் கருதி இளைஞர்களை ஒன்று சேர்க்கவும் மாட்டோம். எங்களது ஒரே நோக்கம் இந்த இளைஞர்கள் எல்லோரையும் ஒன்றிணைத்து ஒருமைப்பாட்டுடன் கூடிய இலங்கையைக் கட்டியெழுப்புவதே.
எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு நாங்கள் கூட்டங்கள் கூட்டுவதாக எதிர்க்கட்சியினர் சொல்லக் கூடும். என்றாலும், இது தேர்தல் கூட்டம் அல்ல.
88 - 90 பயங்கரவாதக் காலப் பிரிவில் இளைஞர்களின் கரங்களில் ஆயுதங்கள் கொடுக்கப்பட்டன. அன்றைய அரசியல் தலைவர்கள் அதனைத்தான் அன்று செய்தார்கள். இன்னும் சில அரசியல்வாதிகள் இளைஞர் அணியை ஒன்று சேர்த்து ஆர்ப்பாட்ட பேரணிகளுக்குள் இணைத்துக் கொள்கிறார்கள்.
என்றாலும், நாங்கள் இந்த “நீலப் படையணி” மூலம் நாட்டின் முன்னேற்றத்திற்கு அபிவிருத்திக்கு இந்த இளைஞர்களை தயார்படுத்துகின்றோம். எங்கள் கட்சியில் ஆயுதங்கள் இல்லை. இளைஞர்கள் கரங்களில் ஆயுதமேந்த இடமளிக்கவும் மாட்டோம்” எனவும் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment