அமைச்சர் சம்பிக்கவின் “பேஸ்புக்” அபேஸ்!
அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் உத்தியோகபூர்வ முகநூல் கணக்கு முடக்கப்பட்டுள்ளதுடன் அத்துடன் அவரது ரசிகர் வட்டமும் முடக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணங்கள் ஏதுமில்லை என தொழில்நுட்ப மற்றும் ஆய்வு அமைச்சு தெரிவிக்கின்றது.
இதுதொடர்பில் அமைச்சர் பேஸ் புக் நிருவாகத்தினரிடம் வினவியபோது, எதிர்வரும் நாட்களில் இதுபற்றி அறியத்தரப்படும் என “பேஸ் புக்” நிருவாகக் குழு அமைச்சருக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளது.
தனது பெயரை ஒத்த போலி முகநூல் பக்கங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றை போலி விடயங்கள் பகிர்ந்துகொள்ளப்படுவதாகவும், இதுவரை தனது பெயரில் 5 முகநூல் பக்கங்கள் உருவாக்கப்பட்டு உலாவருவதாகவும் அமைச்சர் சம்பிக்க முகநூல் நிருவாகத்தினருக்குத் தெரிவித்துள்ளார்.
தனது முகநூலில் பல்வேறு கருத்துக்களுடைய 21000 இற்கும் குறையாத இரசிகர்கள் இருந்ததாகவும் அமைச்சர் மேலும் தெளிவுறுத்தியுள்ளார்.
ஜனநாயக நாட்டில் தனது சொந்தக் கருத்துக்களை விடுத்து, மத, கலாச்சார, அரசியல், சமூக விடயங்களே பரிமாறப்பட்டன. எனது முகநூலும் (FACEBOOK) தனது வாசகர் வட்டமும் (FB PAGE) முடக்கப்பட்டதன் பின்னணியில் சில தீய சக்திகள் இருப்பதைத் தான் உணர்வதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment