பொலிஸாருக்கு இடைஞ்சல் விளைவித்த வழக்கில் முஸ்லிம் காங்கிரஸின் நால்வருக்கு பிணை!
கிண்ணியா சுரங்கல் பிரதேசத்தில் அனுமதிப் பத்திரமின்றி மாடொன்று அறுப்பதற்காக கொண்டு செல்லும்போது இருவரைக் கைது செய்த பொலிஸ் விசேட பிரிவினருக்கு இடைஞ்சல் விளைவித்தன் பேரில் சட்ட மா அதிபரினால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட வழக்காகின் பிரதிவாதிகளான திருகோணமலை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் என்.எம். தௌபீக் உள்ளிட்ட நால்வர் 50,000 ரூபா வீதம் பணப்பிணையுடனும், 5 இலட்சம் ரூபா வீதம் சரீரப் பிணையுடனும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் திருகோணமலைப் பிராந்திய விசேட பொலிஸ் விமர்சனப் பிரிவில் காட்சியளிக்குமாறும் நீதிபதி ஆர்.ஏ. ரண ராஜா தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment