முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்! ஐ. நா செயலாளர் பான் கீ மூன்
இலங்கையில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலை நிறுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேவேளை, இலங்கையில் முஸ்லிம்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்பில் அவர் தனது அவதானத்தையும் செலுத்தி உள்ளரொன தகவல்கள் வெளிவந்துள்ளன.
மார்ச் மாதம் இடம்பெற்ற மனித உரிமைகள் பேரைவை அமர்வின் போது சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்ட விடயத்தையும் பான் கீ மூன் நினைவுபடுத்தியுள்ளார்.
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
0 comments :
Post a Comment