கணவனால் அசிட் வீச்சிற்க்கு உள்ளான பெண்..............
திருகோணமலை, புல்மோட்டை, மகசேன்புர பிரதேசத்தில் பெண் ஒருவர் அசிட் வீச்சுக்கு இலக்காகியுள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தை தொடர்ந்து குறித்த பெண்ணின் கணவனால் அசிட் வீச்சு மேற்கொள்ளப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 34 வயதான குறித்த பெண் தற்போது சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment