ஜேவிபி தலைவர் வாகன விபத்தில் படுகாயம்! (சற்று முன் கிடைத்த செய்தி)
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளு மன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க சென்ற வாகனம் இரத்தினபுரிப் பகுதியில் விபத்துக்குள்ளாகி யுள்ளது. அவர் சென்ற வாகனம் டிப்பர் ஒன்றுடன் மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதனால் காயமடைந்த அநுர குமார திசாநாயக்க இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எனினும் அவரது நிலை கவலைக்கிடமானதாக இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
(கேஎப்)
0 comments :
Post a Comment