Monday, July 7, 2014

மகனின் மரணத்தில் சந்தேகம்!

மனிப்பாயை சேர்ந்த ஜூட் ஜெனிஸ்டன் கடந்த மாதம் 11ஆம் திகதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் தனது மகனின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக குறிப்பிடும் அவரது தாயார் தமது மகனின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது அவர் எழுதினார் என நம்பப்படும் கடிதமொன்று கண்டெடுக்கப்பட்டதுடன் அக்கடிதத்தில் தனது மரணத்திற்கு காதல் முறிவே காரணம் என எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த மரணம் தொடர்பான மரண விசாரணை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நிலுவையில் இருந்து வரும் நிலையில்- பொலிஸார் உயிரிழந்தவர்களின் பெற்றோரை அழைத்து காதலி வீட்டாருடன் சமரசமாக செல்லும்படி இரு தடவைகள் கூறியதாக ஜூட் ஜெனிஸ்டன் தாயார் குறிப்பிடுகின்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com