யாழில் பெண்ணுக்கு நள்ளிரவில் நடந்த அவலம்!
யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொ ன்றில் கத்திமுனையில் 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. குறித்த வீட்டு க்குள் செவ்வாய்க்கிழமை (29) அதிகாலை 1 மணிக்கு நுழைந்துள்ள கொள்ளையர்களில், வீட்டிலுள்ளவர்களை கத்தியைக் காட்டி அச்சுறுத்தியே கொள்ளையில் ஈடுபட்டு ள்ளனர் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி வீட்டிலிருந்த பெண், செவ்வாய்க்கிழமை (29) அதிகாலை மலசல கூடத்திற்கு செல்வதற்காக வீட்டிற்கு வெளியில் வந்திருந்த வேளை, அங்கு முகத்தைத் துணியினால் கட்டிய நிலையில் நின்றிருந்த இருவர் அந்த பெண்ணை கத்தி முனையில் பிடித்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கணவன் மற்றும் மகன் ஆகியோரைக் சத்தம் போட வேண்டாம் எனவும் சத்தம் போட்டால் பெண்ணை கத்தியால் குத்துவோம் என்றும் மிரட்டியுள்ளனர். தொடர்ந்து, வீட்டின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 15 பவுண் நகை (6 இலட்சத்து 30 ஆயிரம்) மற்றும் 3 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றினைக் கொள்ளையடித்துக் கொண்டு வீட்டிற்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து, குறித்த வீட்டுக்காரர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர். அந்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment