Friday, July 11, 2014

ஐ.நா.சபையின் இராணுவக் கண்காணிப்பாளர்களை வெளியேறுமாறு இந்தியா கோரிக்கை!

இந்தியாவுடன் காஷ்மீர் இணைவதை ஏற்கமாட்டோம் - பாகிஸ்தான்!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையின் சாசனத்திற்கு அமைய காஷ்மீர் விவகாரம் தற்போதும் தீர்க்கப்பட வேண்டிய ஒர் பிரச்சினையாக உள்ளது எனவும் இந்தி யாவுடன் காஷ்மீர் இணைவதை ஒருபோதும் ஏற்க மாட்டோம் எனவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது

இதேவேளை டில்லியிலுள்ள இந்திய மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் இராணுவக் கண்காணிப்பாளர்களை வெளியேறுமாறு இந்தியா அறிவித்துள்ளது. இந்தியாவின் இந்த தீர்மானம் குறித்து பதலளித்த பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்,

காஷ்மீர் பிரச்சினை தொடர்பான சட்ட அந்தஸ்த்தில் இந்த நகர்வு எந்தவொரு தாக்கத்தையும் செலுத்தாது எனக் கூறியுள்ளார். ஐநா இராணுவ கண்காணிப்பாளர்களின் பங்களிப்பு சிம்லா உடன்படிக்கை மற்றும் அது சார்ந்தது நிறுவப்பட்ட எல்லை கட்டுப்பாட்டு கோடு என்பவற்றுக்கு அப்பால்பட்டதென இந்தியா குறிப்பிட்டுள்ளது.

ஜம்மு– காஷ்மீர் பகுதியிலுள்ள யுத்த நிறுத்த கோட்டுப் பகுதியில் 1949 ஆம் ஆண்டு முதல் ஐநா இராணுவக் கண்காணிப்பாளர்கள் நிலைகொண்டிருந்தனர். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான யுத்த நிறுத்ததை அவர்கள் மேற்பார்வை செய்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment