Friday, July 4, 2014

பேருவலை விடயத்தில் ஊடகங்கள் உண்மையை மூடி மறைத்தன - குற்றம் சுமத்துகிறார் மெதகம தம்மானந்த

பௌத்த மதகுருக்களும் சிங்களவர்களும் முஸ்லிம் அடிப்படைவாதிகளால் தாக்கப்படுகிறார்கள்!

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இலங்கையெங்கும் தற்போது பரவியுள்ளார்கள் எனவும், அதற்கெதிராக்க் குரல்கொடுக்க்க் கூடிய சிங்களவர்கள் பலமாகத் தாக்கப்படுகிறார்கள் எனவும் மெதகம தம்மானந்த தேர்ர் குறிப்பிடுகிறார்.

அகில இலங்கை பௌத்த மகா சம்மேளன கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தம்மானந்த தேரர் மேலும் குறிப்பிடுகையில் -

“இன்று இலங்கையில் கைகலப்பு நிலைமை ஏற்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு எதிர்காலம் பற்றி தெளிவுறுத்த வேண்டிய கடமையில் நாங்கள் உள்ளோம். பௌத்த மதகுருமாருக்கும், சிங்களவர்களுக்கும் இழைக்கப்படும் இன்னல்கள் நாளுக்கு நாள் கூடிச் செல்கின்றன. இலங்கையில் தெட்டத் தெளிவாக இஸ்லாமிய அடிப்படைவாதம் இருக்கின்றது. வெவ்வேறு பகுதிகளிலும் இவர்கள் இருக்கின்றார்கள். பேருவலை விடயமும் அவர்களின் நடவடிக்கைதான். அதில் பௌத்தர்களின் வீடுகளே இல்லாதொழிந்தன. என்றாலும் ஊடகங்கள் அதனைச் சரிவர சொல்லத் தவறின.

பௌத்த இளம் துறவியொருவர் ஏதேனும் சிறு குற்றம் இழைத்தாலும், அது பற்றி, அவர் பற்றி, அவர் தங்கியிருக்கும் விகாரை பற்றி முழு விபரங்களும் பூதாகரப்படுத்தப்பட்டு ஊடகங்களில் வெளிவருகின்றன. என்றாலும், போதைப் பொருள் கடத்தல்கார்ர்கள், குற்றவாளிகள் பற்றி அவர்கள் அவ்வாறு எழுதுவதில்லை.

மன்னாரில், வில்பத்தில், இன்று என்ன நடக்கின்றது? இன்று இந்நாட்டு பௌத்தர்களின் குறிக்கோள் அழித்தொழிக்கப்படுகின்றன. இதற்காக அரச சார்புடைய பல நிறுவனங்கள் உதவிக் கரம் நீட்டுகின்றன.

எங்கள் பௌத்த துறவிகள் நாட்டினுள்ளே நிகழ்கின்ற அடாவடித்தனங்கள் பற்றி குரல் கொடுக்கும்போது அவர்களை குற்றவாளிகளாக்க் காட்ட முயல்கின்றார்கள்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com