இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் வாழ்த்துச் செய்தி!
அனைவருக்கும் இதயம் நிறைந்த நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்
நோன்பு நோற்றுப் பெற்ற பயிற்சியோடு அடுத்து வரும் காலத்தை எதிர்கொள்வோமாக! முஸ்லிம் உம்மத் நாட்டிலும் உலகிலும் எதிர்கொள்ளும் சோதனை மிக்க காலத்தைக் கடந்து செல்வதற்காக ஈமான், இறையச்சம் என்பவற்றோடு தனிப்பட்ட, குடும்ப, மற்றும் சமூக வாழ்விலும் எமது பொறுப்புக்களை உணர்ந்து செயல்படுவோமாக! வாழ்வின் அனைத்து துறைகளிலும் நன்மை செய்து வாழுகின்ற ஒரு சூழலைக் கட்டியெழுப்புவோமாக! ஏனைய சமூகங்களோடு உறவுகளைப் பலப்படுத்தி இணக்கமாக வாழந்த எமது மரபுகளை தொடர்ந்தும் உறுதியோடு பேணி வருவோமாக! நாட்டிலும் சமூகத்திலும் சுபீட்சமானதொரு எதிர்காலம் மலர அர்ப்பணத்தோடு உழைப்போமாக!
ஈதுல் பித்ர் ஆகிய இந்த நன்நாளில் எங்களது நற்செயல்களுக்கான கூலியை நிரப்பமாக தந்து எமது பாதங்களை அவனது தீனில் அல்லாஹ் ஸ்தீரப்படுத்துவானாக!
மீண்டும் அனைவருக்கும் இதயம் நிறைந்த ஈதுல் பித்ர் நல்வாழ்த்துக்கள்.
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
அமீர்,
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
0 comments :
Post a Comment