Friday, July 4, 2014

பிரதமர் அலுவலக வாகனத்தில் வந்தவர்களால் எனது மகள் கடத்தப்பட்டாள்! தந்தை ஆரப்பாட்டம்!

காணாமல் போன தனது மகளை தேடித்தருமாரு தந்தை யொருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பிரதமர் அலுவலக வாகனத்தில் தனது மகள் கடத்தப்பட்டதாக கூறி, கண்டி நகரில் தந்தை ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். கடுகன்னாவ - லகமுவ பகுதியைச் சேர்ந்த வில்பட் தயானந்த என்பவரே இவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தனது 25 வயதான மகளை கடந்த 29ம் திகதி பிரதமர் அலுவலக வாகனத்தில் வந்த சிலர் கடத்திச் சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனது மகள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் இல்லாததால் அவரைத் தேடித் தருமாறு கோரியே அவர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பில் தாம் கடுகன்னாவ பொலிஸில் முறையிட்டு ள்ளதாகவும், பொலிஸார் இந்த கடத்தல் தொடர்பில் தெரிந்திருந்தமையால் இது குறித்து பதிலளிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று காலை 8.30 அளவில் கண்டி நகர் மத்தியில் அவர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்ததை அடுத்து அவரை அப்புறப்படுத்த மோட்டார் வாகன பிரிவு அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டனர். பின்னர் மோட்டார் வாகன பிரிவு பொறுப்பதிகாரி விடுத்த வேண்டுகோளை அடுத்து அவர் அங்கிருந்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இது குறித்து மத்திய மாகாண சிரேஷ்ட பதில் பொலிஸ் மா அதிபரிடம் வினவியபோது அவரது மகள் வேறொருவருடன் சென்றமையே இதற்குக் காரணம் என தெரிவித்தார். இது அவரது தனிப்பட்ட பிரச்சினை எனவும், எது எவ்வாறு இருப்பினும் பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த பெண் திருமணமானவர் எனவும் அவரை அவரது கணவருடன் சென்றுள்ள தாகவும், இது தொடர்பில் வினவியபோது பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் அரசியல்வாதிகள் எவரும் தொடர்புபட்டிருப்பதாக தகவல் இல்லை எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com