பொலன்னறுவையில் நேற்றிரவு இரண்டு பிக்குமார் இனந்தெரியாதோரால் தாக்குதல்!
பொலன்னறுவை அரலகன்வில பிரதேசத்தில் நேற்றிரவு இரண்டு பிக்குமார்கள் இனந்தெரியாதோரால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். சிரிபாலன விகாரையில் இருக்கும் பிக்குகள் இருவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான பிக்குகளில் ஒருவர் 40 வயதையும் அடுத்தவர் 17 வயதையும் உடையவர்களாவர். விகாரைக்கு அண்மையிலுள்ள பாதை ஒன்றினூடாகச் செல்லும்போதே இவர்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். காயமடைந்த இருவரும் அரலகன்வில அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment