அஸ்வரின் கைத்தொலைபேசிக்கு பறந்துவரும் தூசண வார்த்தைகள்…!
ஐவரைத் தேடி பொலிஸ் வலைவீச்சு!
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வரின் கைத்தொலைபேசிக்கு அடிக்கடி அம்மண வார்த்தைகளால் பலர் ஏசிவருவதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு தேடுதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் அஸ்வர் எம்.பிக்கு தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டோர் பற்றித் தேடியதில் பாடசாலையை விட்டு விலகிச் சென்றுள்ள மாணவன் ஒருவன் உட்பட இன்னும் ஐவர் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவர்கள் ஐவரையும் வரவழைத்து, அவர்களிடமிருந்து விசாரணைகள் செய்துவிட்டு அவர்களை விட்டுள்ளனர். என்றாலும் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவர்கள் ஐவரும் பேருவலை, அளுத்கம, பாணந்துறையைச் சேர்ந்த முஸ்லிம்களாவார்கள்.
(கேஎப்)
0 comments :
Post a Comment