மாதம் ஒருமுறை அனைத்து மத அமைப்புக்களையும் கோத்தபாய சந்திப்பார்!
அரச பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ ஒவ்வொரு மாதமும் இலங்கையிலுள்ள அனைத்து மத அமைப்புக்களையும் சந்தித்து அவற்றுடன் கலந்தாலோசிப்பதற்குத் தீர்மானித்துள்ளார்.
தற்போது புதிய தீர்மானத்திற்கேற்ப, அனைத்து மத அமைப்புக்களையும் அழைத்து கருத்துக்களை வினவுவதற்கும், அனைத்துப் பகுதியினரையும் சந்தித்து அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் பற்றி கலந்தாலோசிப்பதற்கும் அவர் தீர்மானித்துள்ளார்.
சென்ற வெள்ளிக்கிழமை பௌத்த அமைப்பொன்றைச் சந்தித்த வேளையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment