ரஜரட்ட பல்கலைக்கழக உபவேந்தரை பணயமாக பிடித்து வைத்த மூவர் கைது!
ரஜரட்ட பல்கலைக்கழக உபவேந்தர் அடங்கலாக மூன்று விரிவுரையாளர்களை பணயமாக பிடித்து வைத்த குற் றச்சாட்டின் பேரில், மூன்று மாணவர்கள் கைது செய் யப்பட்டுள்ளனர். மேலும் 34 மாணவர்களை கைது செய் வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித் துள்ளனர்.
ரஜரட்ட பல்கலைக்கழக உபவேந்தர் மற்றும் விரிவுரையாளர் உள்ளிட்டாNரை, நிர்வாக கட்டிடத்தில் பணயமாக பிடித்து வைத்து குழப்பத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், இம்மாணவர்குள் கைது செய்யப்பட்டனர். இப்பல்கலைக்கழக மாணவர் பேரணியின் செயற்பாட்டாளர்கள் மூவரே, கைது செய்யப்பட்டனர்.
உபவேந்தரினால் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கமைய, இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இவ்விடயம் தொடர்பாக மாணவர்கள் சிலரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
இதேவேளை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர ஏனைய பீடங்கள் அனைத்தும் நேற்று முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment