பொலிஸ் கான்ஸ்டபிளை கடத்திய மூவர் கைது! கல்கிஸ்ஸை போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி பதவி நீக்கம்!!
கொழும்பு, கல்கிசையில் அமைந்துள்ள டெம்பிலஸ் பாதையில் இரவு நேர ரோந்து சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸ் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முச்சக்கரவண்டியில் வந்த இனம்தெரியாதோர் கடத்திச்சென்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவரை கைதுசெய்துள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர்.
கடத்திச்செல்லப்பட்ட கான்ஸ்டபிள், பொலிஸ் நடமாடும் சேவைப்பிரிவினருக்கு அழைப்பினை ஏற்படுத்தி தெரிவித்ததையடுத்து எதுவித பாதிப்புமின்றி மீட்கப் பட்டுள்ளார். தான் கடமையில் ஈடுபட்டிருந்த வேளை அங்கு வந்த முச்சக்கரவண்டியொன்றை விசாரணைக்காக நிறுத்தியதாகவும் வண்டியை செலுத்தி வந்த சாரதி தன்னை திட்டியதுடன் வண்டியில் அமர்ந்திருந்த இருவர் தன்னை பிடித்து இழுத்து வண்டியில் ஏற்றியதாகவும் பொலிஸ் கான்ஸடபிள் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட குற்ற விசாரணை பிரி வினர், கடத்தல் சம்வத்தோடு தொடர்புடையதாக கூறப்படும் மூவரை கைதுசெய்து ள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களை கல்கிசை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கல்கிஸ்ஸை போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி பதவி நீக்கப்பட்டுள்ளார். இன்று (20) அதிகாலை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நால்வரினால் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இந்த கடத்தல் தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கல்கிஸ்ஸை போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி ஏனைய பொலி ஸாருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்காமையின் காரணமாக பதவி நீக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக கல்கிஸ்ஸை போக்குவரத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவி நீக்கப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment