லண்டன் விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த விமானம் மீது மோதிய மற்றொரு விமானம். பெரும் பரபரப்பு (வீடியோ)
லண்டன் விமான நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு விமானத்தின் மீது தரையிறங்கிய ஒரு விமானம் மோதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று மாலை லண்டனில் உள்ள Stanstead Airport என்ற விமான நிலையத்தில் நின்று கொண் டிருந்த Ryanair விமானம் ஒன்றின் மீது அதே நிறுவனம் விமானம் தரையிறங்க முயற்சித்த போது ஒன்றுடன் ஒன்று மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு விமானத்தின் இறக்கையும், மற்றொரு விமானத்தின் வால் பகுதியும் சேதமடைந்தது.
இரண்டு விமானத்திலும் சேர்த்து மொத்தம் 189 பயணிகள் இருந்தனர். அவர்கள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இரு விமானங்களின் பயணமும் ரத்து செய்யப்பட்டது. பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் பலமணி நேரங்கள் விமானம் தாமதமாக கிளம்பியதால் பயணிகளிடம் சுலயயெசை நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனினும் இரண்டு விமானத்திற்கு ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய பலவாரங்கள் ஆகும் என கூறப்படுகிறது.
0 comments :
Post a Comment