சுவிஸ் வாழ் தமிழ் மக்களை சந்திக்கின்றார் புளொட் தலைவர் சித்தார்த்தன். புளொட் சுவிஸ் கிளையின் பகிரங்க அழைப்பு
ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் வாழ் தமிழ் மக்களைச் சந்திக்கவுள்ளதாக அவ்வமைப்பின் சுவிஸ் கிளை அறிவித்துள்ளதுடன் பொதுமக்களுக்கு பகிரங்க அழைப்பும் விடுத்துள்ளது. இச்சந்திப்பின்போது இலங்கையின் வடகிழக்கில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்கள், அன்றாட பிரச்சினைகள், கல்வி, சுகாதாரம், மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளதாகவும் , பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்தும் தெளிவுபடுத்தப்படவுள்ளதாகவும் அக்கிளையினர் அறிவித்துள்ளனர். .
இக்கலந்துரையாடலானது எதிர்வரும் 20.07.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 02.00 (14.00) மணியளவில் சூரிச் மாநகரின் Gemeinschaftssaal (Genossenschaftshaus Friesenberg) Schweighofstrasse 296, 8055 Zürich என்ற முகவரியில் இடம்பெற விருக்கின்றது.
தொடர்புகட்கு:
076.5838410,
079.6249004,
079.8461170,
079.8224153,
077.9485214.
**மண்டபத்துக்கான வழி...
சூரிச் புகையிரத நிலையத்தில் இருந்து "S10" உதிளிபெர்க் (Uetliberg) நோக்கி செல்லும் (தளம் -21,22) புகையிரதத்தில் மூன்றாவது தரிப்பிடமான ப்ரீசென்பேர்க் (Friesanberg ) அல்லது ஸ்ராசென்வேர்க்ஸ்அம்த் (Strassenwergesamt) நோக்கி செல்லும் 32ம் இலக்க பஸ்ஸில், அல்லது சீல்சிற்றி நோக்கி செல்லும் 89ம் இலக்க பஸ்ஸில், ப்ரீசென்பேர்க் ஸ்ராச (Friesanberg Strasse) தரிப்பிடத்தில் இறங்கவும்.
1 comments :
தமிழர்களின் ரத்தம் குடித்த காட்டேரி பிரபாகரனை தம்பி என்று சொல்லும் இவனை என்ன வென்று சொல்வது ?????????
பதவி ஆசை பிடித்த பேமானி.
Post a Comment