திடீரென பற்றி எரியும் தீயினால் பீதியில் மக்கள்!! (வீடியோ)
கோத்தகிரி அருகே சிறுவர்களின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கூக்கல் கிராமத்தில் 200ற்கும் மேற்பட்ட படுகர் இன மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி ( 41). இவருடைய மனைவி பிரியா (38). இவர்களுக்கு ராகுல் (14), கோகுல் (12) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சுப்பிரமணி அரசு போக்குவரத்து கழகத்தில் பேருந்து ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார். மேலும், இவர் ஹெத்தையம்மன் கோவில் பூசாரியாக உள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராகுல், கோகுல் ஆகியோர் பள்ளிக்கு புறப்படும் போது அவர்கள் அணிந்து இருந்த சீருடையில் திடீரென்று தீப்பிடித்தது. பின்னர் மாணவர்கள் கூச்சலிடவே அவர்களுடைய தாயார் பிரியா தீயை அணைத்தார்.
இதில் புத்தகப்பை முற்றிலும் எரிந்து சாம்பலானது. பின்னர் அவர்களுடைய உடல்களில் அடிக்கடி தீப்பிடித்து எரிந்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் அந்த சிறுவர்களின் வீட்டில் திடீரென பொம்மை உருவமும் , பாம்பு உருவமும் தெரிவதாகவும், வீட்டில் வைத்து இருக்கும் பொருட்கள் அனைத்தும் தானாகவே தூக்கி வீசப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் சங்கர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, அந்த சிறுவர்களின் வீட்டின் முன்பு பாதுகாப்பிற்காக 4 பொலிசாரை நியமிக்க மாவட்ட ஆட்சியர் சங்கர் உத்தரவிட்டார். இவர்கள் அந்த சிறுவர்களின் வீட்டின் முன்பு தங்கியிருந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவுடன் சிறுவர்களின் உடலில் தீப்பிடிப்பது நின்று உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர். கூக்கல் கிராமத்தை சேர்ந்த ராகுல், கோகுல் ஆகிய சிறுவர்களின் உடல்களில் தானாக தீப்பிடிப்பது இல்லை. ஆனால் அந்த சிறுவர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு உதவுபவர்களின் வீடுகளில் தீப்பிடிப்பதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அந்த சிறுவர்களின் வீடுகள் முன்பு பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவம் எப்படி நடைபெறுகிறது என்பது குறித்து அறிய சென்னையில் இருந்து தட அறிவியல் குழுவினர் ஆய்வு செய்து உள்ளனர். மேலும் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படும் துணிகளை அவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சோதனை அறிக்கை வந்த பிறகே இந்த சம்பவங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பது குறித்து தெரியவரும். இச் சம்பவம் பற்றி சன் செய்தியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்து. காணொளி உங்கள் பார்வைக்கு.....
0 comments :
Post a Comment