காணாமற்போயிருந்த வெள்ளை நாகம் மீட்பு !! (வீடியோ)
காணாமற்போயிருந்த வெள்ளை நாகம் தலையணை உறைக்குள் கட்டப்பட்ட நிலையில் தெஹிவளை மிருகக்காட்சிசாலையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எவரேனும் நாகத்தை மீண்டும் மிருகக்காட்சிசாலைக்கு கொண்டுவந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண கூறியுள்ளார். தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்த சுமார் இரண்டடி நீளமான வெள்ளை நாகம் கடந்த திங்கட்கிழமை முதல் காணாமற்போயிருந்தது.
இந்நிலையில் தலையணை உறையொன்றுக்குள் கட்டப்பட்ட நிலையில் மிருகக்காட்சிசாலை வளாகத்திலிருந்து நேற்று காலை எட்டு மணியளவில் நாகம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
பறவைகளுக்கு பயிற்சியளிக்கும் உத்தியோகத்தர் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் நாகத்தை மீட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட வெள்ளை நாகம் தெஹிவளை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment