ஆளும் கட்சி பிரதேச சபை உறுப்பினர் ஜேவிபி உறுப்பினரை போத்தலால் தாக்கினார்...!
ஆளும் கட்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கும், மக்கள் விடுதலை முன்னணி பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கும் இடையே எழுந்த வாய்த் தர்க்கமானது நீண்டு சென்றதால், ஆளும் கட்சி உறுப்பினர் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரை போத்தலால் அடித்துத் தாக்கியுள்ளார்.
தனமல்வில பிரதேச சபையில் நேற்று முன்தினம் நடந்துள்ள இச்சம்பவத்தால் தனமல்வில பிரதேச சபையின் மாதாந்தப் பொதுக்கூட்டம் சூடுபிடித்ததெனத் தெரியவருகின்றது.
மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த எஸ்.பீ. சிரிசேன என்பவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
தான் பேசும்போது, தனது பேச்சை இடைமறித்ததனாலேயே ஆளும் கட்சி உறுப்பினர் ரஞ்சித் குமாரசிங்க தன்னை போத்தலால் தாக்கியுள்ளார்.
எவ்வாறாயினும், இறுதியில் ரஞ்சித் குமாரசிங்க, சிரிசேனவிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment