இலங்கை நீதிமன்றம் கொலை குற்றவாளிகளுக்கு வழங்கிய தண்டனையை வரவேற்கின்றோம் - பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம்
கடந்த 2011 ஆம் ஆண்டு 12ஆம் மாதம் 25ஆம் திகதி தங்காலையில் உள்ள ஹோட்டலொன்றில் வைத்து பிரித் தானிய பிரஜையான ஹராம் சேக் கொலைசெய்யப்பட்ட துடன் அவரது காதலியான விக்டோரியா துஷ்பிரயோகத் திற்கு உட்படுத்திய குற்றவாளிகளான தங்காலைப் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சம்பத் சந்திர புஷ்ப விதானபத்திரன உட்பட நால்வருக்கு கொழும்பு, மேல் நீதிமன்றத்தினால் 20 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டதை வரவேற்பதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித் துள்ளது.
மேலும் நீண்டகாலமாக இந்த வழக்கில் நீதியைப் பெற போராடிய அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு இந்த செய்தியை அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் மேலும் இது தொடர்பிலான அடுத்த கட்ட நகர்வுகள் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment