“மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம்” துண்டுப் பிரசுரம் இன்று காலியில்: கொழும்பில் நாளை கருத்தரங்கு
மதவாத்த்திற்கும் இனவாத்திற்கும் எதிராக சம உரிமை அமைப்பு ஜூலை மாதம் நாடளாவிய ரீதியில் நடாத்துகின்ற மக்களைத் தெளிவுறுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் துண்டுப் பிரசுரம் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று (14) காலி நகரிலும் நடைபெற்றது. நாளை (15) கொழும்பில் இது தொடர்பிலான கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
“மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம்” என்ற தொனிப் பொருளில் துண்டுப் பிரசுரங்கள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வும், கையொப்பமிடல் நிகழ்வும் இன்று முழுநாளும் காலி நகரில் நடைபெறுகின்றது.
இதனடிப்படையில் “இனவாத்த்திற்கும், மதவாத்த்திற்கும் கோத்திரவாத்த்திற்கும் எதிரான மனிதர்கள் நாங்கள்” என்ற தொனிப்பொருளில் நாளை பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு நூலக கேட்போர் கூடத்தில் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
சிங்கள, தமிழ், முஸ்லிம் அமைப்புக்களின் உறுப்பினர்கள், கலைஞர்கள், தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவர் அமைப்புக்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளன.
(கேஎப்)
0 comments :
Post a Comment