Tuesday, July 15, 2014

அடுப்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றிய பெண் தீப்பற்றி மரணம்! நோர்வூட்டில் சம்பவம்

நோர்வூட் சென் ஜோன்டிலரி மேல்பிரிவு தோட்டத்தில் வீடொன்றில் மண்ணெண்ணெய் அடுப்பிற்கு மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டிருந்த குப்பி லாம்பு தவறி குடும்பப்பெண்மீது மேல் விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்தபெண் நேற்று முன்தினம் (13) காலை வீட்டில் உள்ள மண்ணெண்ணெய் அடுப்பிற்கு மண்ணெண்ணெய் ஊற்றும்போதே இந்தசம்பவம் இடம் பெற்றதாக நோர்வூட் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்துதெரியவந்துள்ளது.

எரிகாயங்களுடன் குறித்தபெண்ணைக் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டுசென்று மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் சம்பவதினமே உயிரிழந்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்தபெண் தங்கவேல் சிந்துஜா எனவும் 28வயது மதிக்கதக்க மூன்று பிள்ளைகளின் தாய் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com