மாடுகளை ஏற்றிவந்த லொறி விபத்து! ஒருவர் ஸ்தலத்திலேயே பலி!
கந்தரையில் சம்பவம்!
ஹம்பாந்தோட்டையிலிருந்து மாடுகளை ஏற்றிச் சென்ற சிறிய வாகனமொன்று நேற்று (06) கந்தரை, தலல்ல பிரதேசத்தில் டிப்பர் வாகனமொன்றில் மோதியுள்ளது.
இதனால் மாடுகளை ஏற்றிச் சென்ற வாகனத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்ததுடன் மாடொன்றும் ஸ்தலத்தில் பலியாகியுள்ளது. குறித்த வாகனத்தில் பயணித்த இருவர் கடுங் காயங்களுடன் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹம்பாந்தோட்டை, கரகன்லேவாயவை வசிப்பிடமாகக் கொண்ட மூன்று குழந்தைகளின் தந்தையான முஹம்மட் அஸ்மி (33 வயது) என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment