வாழைச்சேனையில் புதிய வகை அதிசய மீன்... (படங்கள்)
வாழைச்சேனை பிரதேசத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில் புதிய வகையான மீன் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (22) அகப்பட்டுள்ளது. வாழைச் சேனையைச் சேர்ந்த முஹைதீன் பாவா நிஸார் என்பவரது படகில் சென்ற மீனவர்களின் வலையிலேயே இந்த மீன் அகப்பட்டுள்ளது. கறுப்பு மற்றும் சாம்பல் நிறமும் கொண்ட இந்த மீன் 07.5 கிலோகிராம் எடையும் 04 அடி நீளமும் உடையதாகக் காணப்படுகின்றதென படகு உரிமையாளர் முஹைதீன் பாவா நிஸார் தெரிவித்தார். இப்புதிய வகை மீன் தொடர்பில் பிரதேச கடற்றொழில் பரிசோதகருக்கு தெரியப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
0 comments :
Post a Comment