மனைவியை சுத்தியலால் தாக்கி அலவாங்கால் குத்திக் கொலைசெய்து புதைத்திருந்த முஸ்லி்ம் நபர் பொலிஸில் சரண்!
காலி நாவின்னவில் மனைவியைக் கொலை செய்து வீட்டின் பின் புறத்தில் புதைத்த கணவர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
முஹம்மத் பலீல் என்ற இந்த நபர் தனது மனைவியை சுத்தியலால் தாக்கிவிட்டு, பின்னர் அலவாங்கால் அடித்துக் கொன்றதாக தானே பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் வீட்டின் பின் புறத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடமொன்றின் அத்திவாரத்திற்கு அருகாமையில் புதைத்துள்ளார்.
பத்து நாட்களுக்கு முன்னதாக குறித்த நபர் மனைவியைக் கொன்று புதைத்துள்ளார். சம்பவம் தொடர்பில் மனதளவில் பாதிக்கப்பட்ட சந்தேக நபர் பள்ளிவாசலின் கதீபிடம் கொலை பற்றி சொல்லியுள்ளார். பிரதம குருவின் அறிவுறுத்தலுக்கு அமைய சந்தேக நபர் காலி பொலிஸ் நிலையத்தில் சரணடடைந்துள்ளார்.
சடலம் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து நீதவான் முன்னிலையில் நேற்றிரவு தோண்டி எடுக்கப்பட்டது.
(கேஎப்)
1 comments :
இறை நம்பிக்கை ஏன் அவசியமாகின்றது என்பது இவ்விடத்தில் தெளிவாகின்றது.
கதீபு கடமைசை சரியாக செய்துள்ளார்.
கொலைக்கான காரணத்தை அடிப்படையாக கொண்டு நீதிமன்று அதற்கான தீர்ப்பை வழங்கட்டும்.
Post a Comment