கிறிஸ்தவர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்துள்ளது இராவணா பலய!
இராவணா பலய அமைப்பு கிறிஸ்தவ அடிப்படைவாதத்திற்கு எதிராக நான்கு நாள் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த திட்டம் பொலனறுவையில் ஆரம்பிக்கப்பட உள்ளதுடன் தமது குழு கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் ஏனைய இடங்களுக்கு சென்று கிறிஸ்தவ அடிப்படைவாதம் மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்கு எதிரான திட்டங்களை முன்னெடுக்கும் என இராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் தமது அனைத்து செயற்பாடுகளையும் நிறுத்த வேண்டும் என நாங்கள் அவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறோம்.
இதனை அவர்கள் கவனிக்க தவறினால், அந்த குழுக்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைய எடுக்கப்படும் எனவும் சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி இரண்டு மாகாணங்களில் பல்வேறு கிறிஸ்தவ மிஷனரிகள் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளமை குறித்து பௌத்த பிக்குகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கிடைத்துள்ள முறைப்பாடுகளை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போதகர்கள் என அழைக்கப்படும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் குறித்த மாகாணங்களில் உள்ள பௌத்தர்கள் மற்றும் இந்துக்களை மதம் மாற்ற முயற்சித்து வருகின்றனர்.
இவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளையும் மத வெளியிடுகளையும் விநியோகித்து மக்களை மதம் மாற்றி வருகின்றனர் எனவும் சத்தாதிஸ்ஸ தேரர் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment