ரியால்களிலும் டொலர்களிலும் திண்டு கொழுத்து இருப்பவர்கள் எனக்கு கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கின்றனர்!
பொதுபல சேனாவைக் கண்டு அஞ்சுபவன் நானல்ல
நான் பிறக்கும்போது முஸ்லிமாகவே பிறந்தேன். இறக்கும் போதும் முஸ்லிமாகவே இறப்பேன், இஸ்லாத்திற்காக நான் தொடர்ந்தும் போராடுவேன் எனவும், முஸ்லிம் மக்களின் நன்மைக்காகவும் மத உரிமைக்காகவும் எனது இறுதி மூச்சுள்ளவரை போராடுவேன். இதற்காக இந்த சபைக்குள்ளும் வெளியிலும் குரல் கொடுத்துக்கொண்டே இருப்பேன் என ஏ.எச்.எம்.அஸ்வர் எம்பி பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ரியால்களிலும் டொலர்களிலும் திண்டு கொழுத்து இருப்பவர்கள் எனக்கு கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கின்றனர். இங்குள்ள சில குருடர்களும் கோணல் புத்திக் காரர்களும் எஸ்.எம்.எஸ் மூலமாக மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள வர்களுக்கு போட்டுக்கொடுத்து எனக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
என்னை கொலை செய்துவிடுவேன் என்று சிலர் அச்சுறுத்தல் விடுக்கின்றனர். என்னை கொலை செய்துவிட்டு முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்றால் என்னை கொலை செய்யுங்கள் என்றும், அளுத்கம பேருவளை பகுதியில் நடைபெற்ற சம்பவங்கள் நாட்டின் வேறு பகுதிகளில் பரவிவிடக்கூடாது என்பதில் அதிக அக்கறை செலுத்தியிருந்தேன். அளுத்கம பேருவளை பகுதியில் ஒவ்வொரு இடங்களிலும் அங்குலம் அங்குலமாக ஒவ்வொரு கல்லிலும் மணலிலும் எனது கால் தடங்கள் பதிந்துள்ளன. இப்போது என்னை விமர்சிப்போர்கள் அப்போது பிறந்தும் இருக்க மாட்டார்கள். அவர்களது பெற்றோரிடம் போய் என்னைப்பற்றிக் கேட்டுப்பார்க்கட்டும் என தெரிவித்தார் .
0 comments :
Post a Comment