நோன்புப் பெருநாளன்று “இத்தா” நாடகம் நேத்ராவில்!
நோன்புப்பெருநாள் தினத்தன்று பி.ப. 3.00 மணி தொடக்கம் 6.00 மணி வரை நேத்ரா அலைவரிசையில் (நேத்ரா டி.வி.) ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் பிரிவு தயாரித்தளிக்கும் நோன்புப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகவிருக்கின்றன.
குறித்த நோன்புப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சியில் 'இத்தா' என்கின்ற விசேட நாடகம் பி.ப.4.00 மணியளவில் ஒளிபரப்பாக இருக்கிறது. இறக்காமம் பர்ஸானா றியாஸின் கை வண்ணத்தில் ரூபவாஹினி முஸ்லிம் பிரிவு தயாரிப்பாளர் மபாஹிர் மசூர் மௌலானா, உதவித் தயாரிப்பாளர் முபாரக் மொஹிடீன் ஆகியோரின் இயக்கத்தில் உருவான இந்த நாடகத்தின் படப்பிடிப்பு அண்மையில் திஹாரியில் நடைபெற்றது.
குறித்த நாடகத்தில் மூத்த கலைஞர் நூர்ஜஹான் மர்சூக், எம்.சி. நஜிமுதீன், எம்.எஸ்.எம்.முப்திகார், எஸ்.எல்.முஹமட் ரஜா, ஏ.சீ.எம்.மக்கீன் மௌலவி, எம்.ஏ.எம்.மனாஸ், பாத்திமா நுஸ்ரத், முஹமட் முன்சிர், ஏ.ஆர்.எம்.இம்திகாப், எம்.ஐ.எம்.இபாத், அம்னத் நதா ஆகிய கலைஞர்கள் நடித்துள்ளனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment