மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்…! - ராஜித்த
அதிகாரப் பகிர்வு மூலம் நாட்டை அபிவிருத்தி முன்னேற்றலாம் எனவும், நாட்டை முன்னேற்றுவதற்குச் சிறந்த முறை கூட்டாட்சி முறையே எனவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிடுகிறார்.
தலவத்துகொட கிரேண்ட் மொனார்ச் ஹோட்டலில் இடம்பெற்ற கடற்றொழில் அமைச்சுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற் கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் -
“இலங்கையை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதற்கு சிறந்த முறை கூட்டாட்சி முறையே. அதிகாரம் பகிரப்படுவதால் நாடு முன்னேற்றம் காணும். நான் மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்துடையவானகவே இருக்கின்றேன்..
இன்று நடாத்தப்படுகின்ற கடற்றொழில் அமைச்சின் மாநாட்டுக்கு அனைத்து மாகாணங்களையும் சேர்ந்த கடற்றொழில் அமைச்சர்கள் வருகை தந்திருக்கின்றார்கள். வடக்கு கிழக்கைச் சேர்ந்த கடற்றொழில் அமைச்சர்களும் வருகை தந்திருக்கின்றார்கள். இன்று இங்கு வருகை தந்திருக்கின்ற அமைச்சர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள், எந்த நிறத்தைச் சேர்ந்தவர்கள் என்பது எனக்குத் தெரியாது. அதனைத் தெரிந்து கொள்ளும் தேவையும் எனக்கில்லை. எனக்குத் தேவை பணியாற்றுவது மட்டுமே. இங்குள்ள அனைவரையும் நியமித்திருக்கின்ற பொதுமக்களுக்குச் சேவை செய்ய வேண்டும். இந்தக் கூட்டத்தை நாங்கள் வடக்கில் நடாத்துவதற்குத்தான் தீர்மானித்திருந்தோம். என்றாலும் பின்னர் வடக்கில் தேர்தல் நடைபெற்று முடிந்த்தன் பின்னர் இந்தக் கூட்டத்தைக் கூட்டத் தீர்மானித்தோம்” எனவும் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment